மொட்டைபோடும் பத்மப்ரியா!

இதோ, நடிகை பத்மப்ரியா போடுகிறார் மொட்டை, ஒரு மலையாளப் படத்துக்காக.
படத்தின் பெயர் குட்டி ஷ்ரங்கு. மம்முட்டி நாயகனாக நடிக்க, ஷாஜி கருண் இயக்கும் இப்படத்தில் புத்த பிட்சுவாக வருகிறார் பத்மப்ரியா. ஆரம்பத்தில் மொட்டை விக் வைத்துக் கொள்ளலாம் என்றுதான் முடிவு செய்தார்களாம். ஆனால் கதை முழுவதையும் கேட்டுமுடித்த பத்மப்ரியா கண்கலங்கிப் போனாராம்.
இப்படி ஒரு வேடத்துக்காக என் கூந்தலை இழக்கவும் நான் தயார் என இயக்குநரிடம் கூறியவர், உண்மையிலேயே மொட்டை அடித்துக் கொள்வதாகக் கூறிவிட்டாராம்.
பத்மப்பிரியாவுக்கு தமிழில் இப்போது சுத்தமாக வாய்ப்புகளே இல்லை. அவர் நடிப்பதாக இருந்த துரை படத்திலிருந்தும் தூக்கப்பட்டு விட்டார். எனவே மீண்டும் சரியான வாய்ப்பு வரும் வரை மலையாளத்திலேயே முழுக் கவனம் செலுத்தவும் முடிவு செய்துள்ளார்.
நல்ல முடிவு!
Comments


Click it and Unblock the Notifications