பூர்ணாவுக்கு திடீர் கிராக்கி!

கொடைக்கானல்தான் பூர்ணாவின் முதல் படம். இப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் திருமுருகனின் முனியாண்டி மூன்றாமாண்டு விலங்கியல் பட வாய்ப்பு கிடைத்தது.
இந்த இரு படங்களும் பூர்ணாவுக்கு பெருத்த கிராக்கியை ஏற்படுத்தி விட்டது. குறிப்பாக முனியாண்டி படத்தில் படு அமர்க்களமாக வந்திருக்கிறதாம் பூர்ணாவின் போர்ஷன்.
நடிப்பு, நடனம், அழகு என அத்தனை ஏரியாவிலும் பூர்ணா, பூரணமாக இருப்பதால், அவருக்கு இளம் ஹீரோக்கள் மத்தியில் நல்ல கிரேஸ் உள்ளதாம். அதிலும், முனியாண்டி பட ஆடியோ வெளியீட்டில் கலந்து கொண்ட விஜய், பூர்ணாவை ஆசினுடன் கம்பேர் செய்து பேசி அவரை குளிர வைத்து விட்டார்.
நடனம், நடிப்பு, தோற்றத்தில் அப்படியே ஆசின் போலவே இருக்கிறார் பூர்ணா என விஜய் கூறப் போக இப்போது போட்டி போட்டுக் கொண்டு அவருடன் ஜோடி சேர இளம் ஹீரோக்கள் ஆவலாக உள்ளனராம்.
ஆசினும் மும்பைக்குப் போய் விட்டார். காலியாகியுள்ள அவரது சீட் நம்மைத் தேடி இப்படி வேகமாக ஓடி வருகிறதே என்ற நம்ப முடியாத சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறாராம் பூர்ணா.


Click it and Unblock the Notifications











