அனுஷ்கா 'பர்ஸ்ட்' - பிரியா மணி 'நெக்ஸ்ட்'!

By Staff

Anushka Shetty
அனுஷ்கா நாயகியாக நடிக்கும் தெலுங்குப் படத்தில் 2வது நாயகியாக நடிக்கவுள்ளார் பிரியா மணி.

பருத்தி வீரன் மூலம் திருப்பம் பெற்ற பிரியா மணி அந்தப் படத்துக்குப் பின்னர் அதிரடி கவர்ச்சிக்குத் தாவினார். அது ஓரளவு கை கொடுத்தது. படம் ஓடுகிறதோ இல்லையோ ஏதாவது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அளவுக்கு பிரியா மணியின் நிலைமை சற்று மேம்பட்டது.

தமிழிலும், தெலுங்கும் திகட்டத் திகட்ட கவர்ச்சியைக் கொட்டி நடித்து வருகிறார் பிரியா. அதிலும் தெலுங்கில் இவரது கவர்ச்சி எல்லையைக் கடந்து கரை புரண்டோடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தற்போது 2வது நாயகி ரேஞ்சுக்கும் மாறியுள்ளார் பிரியா மணி. ஆனால் தெலுங்கில்தான் இந்த மாற்றம்.

இப்படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பவர் அனுஷ்கா. இவர் தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரினிகளில் ஒருவர். இந்தப் படத்தில்தான் 2வது நாயகியாக நடிக்கவுள்ளார் பிரியா மணி.

அனுஷ்காவும், பிரியா மணியும் இந்தப் படத்தில் கவர்ச்சிப் போட்டியே நடத்தப் போகிறார்களாம். அந்த அளவுக்கு இரண்டு பெருக்கும் லெவலாக கவர்ச்சிக் காட்சிகளை பகிர்ந்தளிக்கவுள்ளனர்.

படத்தின் நாயகனாக நடிப்பவர் மகேஷ். இவர் கடைசியாக ஒக்கடு என்ற சூப்பர் டூப்பர் ஹிட்டைக் கொடுத்தவர். அதன் பின்னர் அதிதி என்ற படத்தில் நடித்தார். படம் பிளாப். அதன் பின்னர் கடந்த 3 வருடங்களாக நடிக்காமலேயே இருந்து வந்தார் மகேஷ்.

இந்த நிலையில் பட்டையைக் கிளப்பும் வகையிலான ஹிட்டைக் கொடுக்க ஹீட் நாயகிகளான அனுஷ்கா, பிரியா மணியுடன் களம் இறங்கியுள்ளார் மகேஷ்.

இந்தப் படம் குறித்து இப்போதே தெலுங்குத் திரையுலகில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பி விட்டனவாம்.

எப்படியும் இந்தப் படம் டப் ஆகி தமிழுக்கும் வரும், எனவே தமிழ் ரசிகர்களும் இந்த இரட்டை 'குலாபி'களை தாராளமாக தரிசிக்கலாம், உள்ளது உள்ளபடியே...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X