சூர்ப்பனகை ப்ரியாமணி?

பெரும் பொருட்செலவில் மணிரத்னம் தயாரித்து இயக்கி வரும் படம் அசோகவனம் (தலைப்பு கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது!!) படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், அபிஷேக் பச்சன் என பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்து வருகிறது.
இதன் படப்பிடிப்பு தற்போது கேரள வனப்பகுதிகளில் நடக்கிறது. ராமாயணக் கதையின் நவீன வடிவமாகத் திகழும் இந்தப் படத்தில் சூர்ப்பனகை பாத்திரத்தில் ப்ரியாமணி நடிக்கவிருப்பதாகத் தெரிகிறது.
ஆனால் இதுகுறித்து கருத்துக் கூற மறுத்துவிட்ட ப்ரியாமணி, என்னுடைய பாத்திரம் இந்தப் படத்தில் பெரிதும் பேசப்படும் என இயக்குநர் தெரிவித்துள்ளார். அதனால் அவர் உருவாக்கும் எந்தப் பாத்திரத்திலும் நடிப்பேன், என்றார்.
ப்ரியாமணி தொடர்பான காட்சிகள் இந்த வாரம் முதல் தொடங்குகின்றன.
Comments


Click it and Unblock the Notifications