முதல்வரிடம் மன்னிப்பு கேட்ட ரம்பா!

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம், முதல்வருக்கு நெருக்கமான நடிகர் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தவர் ரம்பா.
கருணாநிதி கதை வசனம் எழுதும் லேட்டஸ்ட் படமான பெண் சிங்கத்தில் இவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் இவர் மலையாளப் படத்தில் நடிக்க போய்விட்டதால், இயக்குநரின் கண்டனத்துக்கு ஆளானார். பின்னர் பெண் சிங்கத்திலிருந்து கழட்டிவிடப்பட்டார்.
ஆனால் ரம்பாவோ, என்னை யாரும் நீக்கவில்லை, நானாகத்தான் விலகினேன் என்று அறிக்கை விட்டார். ஆனால் இப்போது தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்த ரம்பா, தன்னால்தான் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதாகவும், இதற்கு காரணம் தனக்கு வந்த பிற கமிட்மெண்ட்கள்தான் என்றும் கூறி முதல்வரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
சமீபத்தில்தான் கனடா நாட்டு நிறுவனத்துக்கு விளம்பரத் தூதராக ரம்பா ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











