மாளவிகா..நமிதா போய் ரம்பா!

By Staff

Ramba
மாளவிகாவை தூக்கி விட்டு நமீதாவை அணுகிய கார்த்தீகை யூனிட்டார், நமீதா கேட்ட சம்பளத்தைக் கேட்டு ஆடிப் போய் விட்டனராம். இப்போது மார்க்கெட் இல்லாமல் முடங்கிக் கிடக்கும் முன்னாள் தொடையழகி ரம்பாவை அணுகியுள்ளனராம்.

கார்த்தீகை என்ற பெயரில் உருவாகும் படத்தில் முன்பு மாளவிகா நடித்து வந்தார். ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி இருந்த நிலையில் திடீரென அவர் கர்ப்பமடைந்தார். இதனால் பாடல் காட்சியைப் படமாக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து இயக்குநரும், தயாரிப்பாளரும் மும்பை சென்று மாளவிகாவிடம் கெஞ்சிக் கூத்தாடி, நடித்துக் கொடுக்குமாறு கேட்கவே, சரி என்று அவரும் சம்மதித்தார்.

இதையடுத்து டாக்டர் பக்கத்தில் இருக்க நடனமாடி நடித்தார். ஆனால் அடுத்த நாளே பஞ்சாயத்து வெடித்தது. விஷமத்தனமான நோக்கத்தில் தனது வயிற்றை தயாரிப்பாளர் தடவிப் பார்த்ததாக மாளவிகா புகார் கூறவே பரபரப்புதொற்றிக் கொண்டது. இனிமேல் நடிக்க முடியாது என்று கூறி விட்டு மும்பைக்குப் போய் விட்டார் மாளவிகா.

இதையடுத்து நடிகர் சங்கம் பஞ்சாயத்து செய்தது. அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து மாளவிகாவை படத்திலிருந்து தூக்க தீர்மானித்தார் படத் தயாரிப்பாளர். அதன்படி மாளவிகாவை தூக்கி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நமீதாவை அணுகியுள்ளனர். ஆனால் அவரோ பெரும் சம்பளத்தைக் கேட்டுள்ளார். இதைக் கேட்டதும் தயாரிப்பாளரும், இயக்குரும் நடுங்கிப் போய் விட்டார்கள்.

போன வேகத்தில் ரிட்டர்ன் ஆன அவர்கள் தற்போது ரம்பா உள்ளிட்ட சிலரை அணுகியுள்ளனராம். அனேகமாக ரம்பா நடிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X