ரித்துபர்னாவை தூங்க விடாமல் விரட்டிய 'ரேப்'

சில பேர் நடிக்கும்போது அந்த கேரக்டராகவே மாறி விடுவார்கள். சிலருக்கு நடித்து முடித்த பிறகும் கூட அந்த கேரக்டரின் பாதிப்பு இருந்து கொண்டிருக்கும். அந்த வரிசையில் சேர்ந்துள்ளார் ரித்துபர்னா.
கரண் ரஸ்தானின் மிட்டல் வெர்சஸ் மிட்டல் படத்தில் கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கிறார் ரித்துபர்னா. இந்தக் கேரக்டரில் நடித்தபோது அதில் மிகவும் ஈடுபாடாகி விட்டாராம்.
இதனால் நடித்து முடித்த பிறகும் கூட அந்த கேரக்டரின் பாதிப்பிலிருந்து விலக முடியவில்லையாம். ஏதோ தானே கற்பழிக்கப்பட்டது போல உணர்ந்தாராம்.
இதுகுறித்து ரித்துபர்னா கூறுகையில், மிகவும் பயங்கரமான அனுபவம் அது. நான் நடித்த காட்சிகள் எனது மனதை விட்டு அகலவே இல்லை. ஏதோ நானே கற்பழிக்கப்பட்டு விட்டது போல உணர்ந்தேன். என்னால் இரவில் தூங்கக் கூட முடியவில்லை. அவ்வளவு நடுக்கமாக இருந்தது.
அப்படியே தூங்கினாலும் திடீர் திடீரென விழிப்பு வந்து எழுந்து விடுவேன் என்று நடுங்கியபடி கூறுகிறார் ரித்துபர்னா.
இன்வால்வ்மென்ட் இருக்க வேண்டியதுதான். அதற்காக இப்படியா..!


Click it and Unblock the Notifications