தப்புத் தப்பா பேசறாங்க.. ஷெரீன்

தமிழில் புயல் மாதிரி அறிமுகமாகி பின்னர் போதை மருந்து காதலர், தாயுடன் தகராறு என பிரச்சினைகளில் சிக்கி சில காலம் காணாமல் போயிருந்த ஷெரீன், மீண்டும் வந்தார்.
தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் இப்போது மீண்டும் சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் இரு படங்களிலும், கன்னடம், தெலுங்கு, இந்தியில் தலா ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
கதாநாயகியாகவே இனி காலம் தள்ளுவது கஷ்டம் என்பதால் கிடைத்த வேடங்களை விடாமல் பற்றிக் கொள்ளும் ஷெரீன், இல்லாததையும் பொல்லாததையும் கூறி தனது வாய்ப்புகளை சிலர் பறித்து விடுவதாக குறை கூறிவருகிறார்.
யாரந்த சிலர்?
வேறு யார்... எல்லாம் சக நடிகைகள்தான். என்னை போதை மருந்துக்கு அடிமையானவள் என்று பல தயாரிப்பாளர்களிடம் கூறி வாய்ப்புகளைக் கெடுப்பதே சில நடிகைகளுக்கும் அவர்களது அம்மாக்களுக்கும் பொழப்பாப் போச்சு.
நானும் ஒரு பெரிய நடிகைதான். இதை மனதில் கொள்ளாமல், இப்படியெல்லாம் தப்புத்தப்பா பேசறாங்களே... சக நடிகை மீது இப்படி அவதூறு பரப்பலாமா... இந்த திரையுலகில் எத்தனையோ நடிகைகளைப் பற்றி என்னாலும் இப்படிச் சொல்ல முடியும்.
ஆனால் நான் மனசாட்சிக்கு பயந்தவள், என்று புலம்பலும் சீறலுமாய் கொட்டித் தீர்க்கிறார் ஷெரீன்.


Click it and Unblock the Notifications











