சிந்து மேனனின் 'ஈரம்'

ஷங்கர் தற்போது அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதை முடித்து விட்டு ஒரே நேரத்தில் 3 படங்களைத் தயாரிக்கப் போகிறது எஸ் பிக்சர்ஸ்.
இதில் இரண்டு படங்கள் குறித்த விவரம் தெரிய வந்துள்ளது. ஒரு படத்திற்கு ரெட்டைச் சுழி என பெயரிட்டுள்ளனர். இப்படத்தை தாமிரா இயக்குகிறார். இவர் பாலச்சந்தரின் பொய் படத்திற்கு வசனம் எழுதியவர். குழந்தைகளை மையமாகக் கொண்ட கதையாம் இது.
2வது படம் ஈரம். அறிவழகன் இப்படத்தை இயக்கவுள்ளார். மிருகம் புகழ் ஆதியும், நந்தாவும் நாயர்களாக நடிக்க சிந்து மேனன் நாயகியாக நடிக்கவுள்ளார்.
கடல் பூக்கள், சமுத்திரம் ஆகிய படங்களோடு காணாமல் போய் விட்ட சிந்து மேனன் இப்படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார்.
3வது படம் குறித்த விவரங்களை விரைவில் வெளியிடுவார்களாம்.
Comments


Click it and Unblock the Notifications