இந்திக்குத் திரும்புகிறார் ஸ்னிக்தா!

By Sudha

Snigdha
தமிழில் சுத்தமாக வாய்ப்பு ஏதும் வராததால் கவலை அடைந்துள்ள நடிகை ஸ்னிக்தா இந்திக்குத் திரும்புகிறாராம்.

அஞ்சாதே படத்தில் இடம் பெற்ற கத்தாழைக் கண்ணாலே குத்துப் பாட்டு மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ஸ்னிக்தா. அவரது பளிச் அழகும், அசத்தல் கவர்ச்சியும் அவரை சிறந்த குத்துப் பாட்டு ராணியாக மாற்றும் என பலரும் நம்பினர்.

ஆனாலும் அவரை நாயகியாக்குவதாக உறுதி அளித்தார் அறிமுகப்படுத்திய இயக்குநர் மிஷ்கின். இதனால் குஷியான ஸ்னிக்தா முழு நேர குத்துப் பாட்டு ராணியாக மாறும் முடிவை தள்ளி வைத்து விட்டு மிஷ்கினின் நந்தலாலா படத்தில் நடிக்க போய் விட்டார்.

படம் மிகுந்த தாமதத்திற்குப் பிறகு வெளியானது. இதில் ஸ்னிக்தாவின் நடிப்பு பரவலாக பேசப்பட்டபோதிலும் அவரைத் தேடி பட வாய்ப்புகள் வரவில்லையாம். குத்துப் பாட்டுக்கு ஆடுமாறு கேட்டுதான் நிறைய வாய்ப்புகள் வருகிறதாம்.

இதனால் அப்செட்டான ஸ்னிக்தா இப்போதைக்கு தமிழ் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளாராம். மீண்டும் இந்தியில் தீவிர கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் கூறுகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X