ஒத்தப் பாட்டுக்கு சுகன்யா!

ஒரு காலத்தில் ரசிகர்களை உசுப்பேத்திய ஹீரோயின்களில் முக்கியமானவர் சுகன்யா. அவரது இடுப்பசைவு ஆட்டத்துக்கென தனி ரசிகர் வட்டாரம் இருந்தது.
கமல்ஹாசன் முதல் ராமராஜன் வரை பல தரப்பு ஹீரோக்களுடனும் இணைந்து நடித்தார் சுகன்யா. ஆனால் பல்வேறு இளம் நாயகிகளின் படையெடுப்பாலும், ஏறிப் போன வயதாலும் ஹீரோயின் ரேஞ்சிலிருந்து குறைந்து ஓரம் கட்டப்பட்டார் சுகன்யா.
இதையடுத்து அக்கா, அண்ணி, அம்மா வேடங்களுக்கு மாறிய சுகன்யா தஙற்போது டிவியில் சீரியல்களிலும் தலை காட்டி வருகிறார்.
இந்த நிலையில் அவரைத் தேடி ஒத்தப் பாட்டு வாய்ப்பு தேடி வந்தது. சங்கிலி முருகன் தயாரிக்கும் அழகர் மலையில், ஒத்தப் பாட்டுக்கு ஆடியுள்ளார் சுகன்யா. கூட ஆடியுள்ளவர் முன்னாள் ஹீரோவான சரவணன்.
இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள இப்பாடல் வெகுவாக பேசப்படுமாம். சும்மா சொல்லக் கூடாது, பழைய மிடுக்கு குறையாமல் ஆட்டத்தில் அசத்தியுள்ளாராம் சுகன்யா.
மறுபடியும் கடிக்க வருது சித்தெறும்பு!


Click it and Unblock the Notifications











