காதலில் விழவில்லை... சுனைனா!

By Staff

Sunaina
நானும், நகுலும் காதலிப்பதாக கூறப்படுவது வதந்தியே. எனக்கு இன்மம் காதல் வரவில்ைல என்று காதலில் விழுந்தேன் பட நாயகி சுனைனா கூறியுள்ளார்.

தெலுங்கில் 3 படங்களை முடித்து விட்டு படு சூடாக தமிழுக்கு வந்துள்ள சூப்பர் ஹீரோயின் சுனைனா. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்திழுத்து விட்டார் சுனைனா.

பார்த்தவுடன் பச்செக்கன மனதைக் கவரும் அவரது சிம்பிள் அழகுதான் சுனைனாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்களை ஒரே படத்தில் தேடித் தந்துள்ளது.

இப்போது சுனைனா சூடான ஒரு வதந்தியிலும் சிக்கியுள்ளார். காதலில் விழுந்தேன் நாயகன் நகுலுக்கும், சுனைனாவுக்கும் நிஜமாகவே காதல் வந்துவிட்டதாக கூறுகிறது அந்த வதந்தி.

அப்படியா என்று சுனைனாவிடமே கேட்டபோது, இது வெறும் வதந்திதான். நகுலும், நானும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் இருப்பது உண்மையான நட்பு மட்டுமே வேறு எதுவும் இல்ைல என்கிறார் ஜிலீர் புன்னகையுடன்.

தொடர்ந்து அவர் கூறுகையில், காதலில் விழுந்தேன் படத்திற்குப் பின்னர் எனக்கு நிறைய படங்கள் வருகின்றன. ஆனால் காதலில் விழுந்தேன் படத்தில் கிடைத்தது போன்ற கேரக்டர்களில் நடிக்கவே விரும்புகிறேன். அதேசமயம், அதோபன்ற கேரக்டர்களில் தொடர்ந்து நடிக்க மாட்டேன். இதயத்தைத் தொடும் வகையிலான கேரக்டர்களையே எதிர்பார்க்கிறேன் என்கிறார் சுனைனா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X