சுஷ்மிதாவின் "Do Knot Disturb"!

கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாகவே சுஷ்மிதா சென் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், பக்கா காமெடிப் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் சுஷ்மிதா சென். படத்தின் பெயர் டு நாட் டிஸ்டர்ப்.
டேவிட் தவான் இப்படத்தை இயக்கவுள்ளார். இதில் தான் இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடத்தில் நடிக்கவிருப்பதாக சுஷ் கூறுகிறார்.
இப்படம் குறித்து சுஷ்ஷிடம் கேட்டால், இது ஒரு முழுமையான பொழுது போக்குப் படம். கோவிந்தா இப்படத்தில் இருக்கிறார். சிரித்து சிரித்து வயிறே புண்ணாகும் அளவுக்கு இப்படத்தில் நானும், கோவிந்தாவும் காமெடியில் கலக்கவுள்ளோம்.
இதுவரை நடித்திராத வித்தியாசமான கேரக்டரில் நான் நடிக்கிறேன். ரசிகர்களுக்கு எனது வேடம் மிகவும் பிடிக்கும் என்றார் சுஷ்.
இப்படத்தில் லாரா தத்தாவும் இருக்கிறார். இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சுஷ்மிதா சென் சொந்தமாக ராணி லட்சுமிபாய் என்ற படத்தை தயாரிக்கப் போகிறார். இந்தப் படம் தொடர்பான ஆய்வுக்காகவே கடந்த ஒரு வருடமாக படம் எதிலும் நடிக்கவில்லை என்கிறார் சுஷ்மிதா.


Click it and Unblock the Notifications











