பெயரை மாற்றிய தமன்னா!!

தமிழ் சினிமாவுக்கு கேடி மூலம் வந்த அழகிய லேடி தமன்னா. அசரடிக்கும் அழகு, நல்ல நடிப்புத் திறமை என எல்லாம் இருந்தும் கூட தமன்னாவைத் தேடி வாய்ப்புகள் தேடி ஓடி வரவில்லை. கல்லூரி அவரது நல்ல நடிப்புக்கு சிறந்த களமாக அமைந்தது.
தற்போது சூர்யாவுடன் அயன் படத்தில் சகலகலா திறமைகளையும் கொட்டி நடித்து வருகிறார் தமன்னா. தெலுங்கிலும் அவருக்குக் கை நிறையப் படங்கள் இருக்கிறதாம்.
தமன்னா நடித்த காளிதாசு படம் சூப்பர் ஹிட் ஆகவே தமன்னாவைத் தேடி நிறைய தெலுங்குப் பட வாய்ப்புகள் வருகிறதாம்.
இந்த நிலையில் தனது ஆங்கிலப் பெயரில் சில எழுத்துக்களைக் கூட்டி சிறிய மாற்றம் செய்துள்ளார் தமன்னா. நியூமரலாஜிப்படி இந்த மாற்றத்தை செய்துள்ளாராம் தமன்னா.
அதன்படி இனிமேல் தன்னை Tamanna என்று எழுத வேண்டாம். Tamannaah என்றே எழுதுமாறு பத்திரிக்கையாளர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறாராம் தமன்னா.
சரி இவ்வளவு கொள்ளை அழகோடு இருக்கிறீர்களே, அதன் ரகசியம் என்ன என்று தமன்னாவிடம் கேட்டால், சோளியைக் கொட்டி உருட்டியது போல அழகாக சிரித்தபடி, இந்த சிரிப்புதான் முக்கிய காரணம். எனக்கு கவலை என்றாலே என்ன என்று தெரியாது. எப்போதும் சிரித்த முகத்துடன்தான் இருப்பேன். அதுதான் என்னை இளமையாக வைத்திருக்க உதவுகிறது என்கிறார்.


Click it and Unblock the Notifications











