தமன்னாவுடன் தனுஷ்

By Staff

Tamanna
கோலிவுட்டின் இளம் புயல் தமன்னா, தனுஷுடன் புதிய படம் ஒன்றில் இணைகிறார். படம் படிக்காதவன்.

விஜயா கம்பைன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. தலைநகரம், மருதமலை ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த சூரஜ் இப்படத்தை இயக்கவுள்ளார்.

தனுஷுடன் முதல் முறையாக இணைவது குறித்து தமன்னா கூறுகையில், இதை நம்பவே முடியவில்லை. தனுஷுக்கு நான் ஜோடி என்பதை நினைக்கவே வியப்பாக உள்ளது.

கதைப்படி எனக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். எனவே அனுபவித்து நடிக்க ரெடியாகிக் கொண்டிருக்கிறேன் என்றார்.

சமீப காலமாக மாமனார் ரஜினியின் படப் பெயர்களை தனது படத்திற்கு வைத்துக் கொண்டிருக்கும் தனுஷ், ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான படிக்காதவன் பட டைட்டிலை இப்படத்திற்கு சூட்டியுள்ளார்.

படிக்காதவன் படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளரான ஈஸ்வரி புரடக்சன்ஸ் வீராசாமியை (கன்னட நடிகர் ரவிச்சந்திரனின் அப்பா) நேரில் சந்தித்து படிக்காதவன் பட டைட்டிலை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டாராம். அவரும் சந்தோஷமாக ஒத்துக் கொண்டாராம்.

படத்திற்கு மணிசர்மா இசையமைக்கிறார். முதல் முறையாக தனுஷுடன் இப்படத்தில் காமெடிக்கு வடிவேலு இணைகிறார்.

வடிவேலு வந்தாச்சுல்ல, அப்புறம் என்ன அடிச்சு பட்டையைக் கிளப்புங்க பங்காளி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X