ரஞ்சிதா நடித்த 'கடைசி' படத்தை வாங்க போட்டிபோடும் விநியோகஸ்தர்கள்!

By Sudha

Ranjitha
ரஞ்சிதா 'கடைசி'யாக நடித்த 'ஓடும் மேகங்களே' படத்தை வாங்க கடும் போட்டி நிலவுகிறதாம்.

இதில் சாப்ட்வேர் நிறுவன சேர்மனாக நடித்துள்ளார் ரஞ்சிதா. இன்டர்நெட் மூலம் நடக்கும் மோசடிகளை அடிப்படையாக வைத்து இந்த படத்தை செழியன் இயக்கியுள்ளார். நாயகனாக உதய், நாயகியாக ரோஷினி நடித்துள்ளனர்.

சாரா மூவிமேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் பாரதமணி தயாரித்துள்ளார். வி.தஷி இசையமைத்துள்ளார். ஆதி, மைக்கேல் பிரபு ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

நித்யானந்தா, ரஞ்சிதாவின் படுக்கையறை வீடியோ காட்சிகள் வெளியாவதற்கு சில நாட்கள் முன்பு இதன் படப்பிடிப்பு முடிந்தது.

படம் பற்றி இயக்குனர் செழியன் கூறும் போது, "நியூயார்க், லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி, தமிழ் நாடு என சர்வதேச அளவில் நடக்கும் சைபர் கிரைம் குற்றங்களை வைத்து இந்த படத்தை எடுத்துள்ளோம். ரஞ்சிதா கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்தது. படம் முழுக்க வருகிறார்.

நாயகனும், நாயகியும் அவரது சாப்ட் வேர் கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள். இவர்களுக்கும் சைபர் கிரைம் கிரிமினல்களுக்கும் நடக்கும் போராட்டமே கதை. படத்தில் கம்யூட்டர் கிராபிக்ஸ் பரபரப்பாக பேசப்படும்," என்றார்.

ரஞ்சிதாவே படு பரபரப்பாக பேசப்பட்டார். அப்படி இருக்கையில் இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் பேசப்படாமல் போய் விடுமா...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X