மேக்னாவுக்கு தூக்கம் வராதது ஏன்?
காதல் சொல்ல வந்தேன் நாயகி மேக்னா சுந்தருக்கு ஒருவரைப் பார்க்காவிட்டால் தூக்கமே வராதாம். அவர் யார் தெரியுமா? நம்ம வடிவேலுதான்.
வடிவேலுவின் வெறித்தனமான ரசிகையாம் மேக்னா. தினசரி வடிவேலு நடித்த காமெடிக் களேபரங்களைப் பார்த்து விட்டுத்தான் தூங்கப் போவாராம். ஒரு நாள் மிஸ் ஆகி விட்டால் கூட என்னமோ போலிருக்குமாம்.
இதுகுறித்து மேக்னா கூறுகையில், வடிவேலுசாரின் காமெடி என்றால் எனக்கு உயிர். அவரது ஒரு காமெடி சீனைக் கூட விட மாட்டேன். தினசரி ஷூட்டிங் முடிந்து திரும்பிய பின்னர் வடிவேலு சார் நடித்த காமெடிக் காட்சிகளை பார்த்து விட்டுத்தான் தூங்கப் போவேன்.
என்றாவது ஒரு நாள் ஒரு சீன் கூட பார்க்க முடியாமல் போனால் எனக்கு ஒரு மாதிரியாகி விடும். அவ்வளவு தீவிர ரசிகை நான். அவருடைய படங்களிலேயே வி்ன்னர் பட காமெடிதான் எனக்கு மிகவும் பிடித்தது. எப்போது பார்த்தாலும் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காமெடி அட்டகாசம் அது என்கிறார் சிலாகித்தபடி.
அப்ப வடிவேலு படத்தில் ஜோடியாக நடிக்கக் கூப்பிட்டால் நடிக்க ரெடியா மேக்னா?


Click it and Unblock the Notifications











