பெங்களூர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார் பூஜா

இந்திய-சிங்கள கலப்பு வழியில் வந்தவர் பூஜா. தமிழில் சினிமா நடிகையாகிய இவர் பெங்களூரில் வசித்து வருகிறார். அவ்வப்போது இலங்கை சென்று வருவார். ஆனால் சமீபகாலமாக சிங்களப் படங்களில் நடித்து பிரபலமானதைத் தொடர்ந்து சுத்தமாக தமிழ்ப் படங்களை மறந்து விட்டார்.
இந்த நிலையில் தற்போது பூஜாவை எங்குமே பார்க்க முடியவில்லை. இதனால் அவர் நடிப்பை விட்டு விட்டதாக கருதப்படுகிறது. ஆனால் இதை மறுத்துள்ளார் பூஜா.
நான் எங்கும் போகவில்லை. பெங்களூரில்தான் இருக்கிறேன். அங்குள்ள ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளேன். நடிப்பை விடவில்லை. தொடர்ந்து சிங்களப் படங்களில் நடித்துக் கொண்டுதான் உள்ளேன். தமிழில் நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன் என்கிறார் பூஜா.
ஆனால் சமீபத்தில் பூஜாவுக்கு ரகசியத் திருமணம் நடந்ததாகவும் ஒரு தகவல் கூறுகிறது. கணவர் வீட்டாரின் கோரிக்கையின்பேரில்தான் நடிப்பை அவர் விட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதையும் மறுத்துள்ளார் பூஜா. தனக்கு கல்யாணம் எல்லாம் ஆகவில்லை என்று அவர் கூறுகிறார்.
மூடு மந்திரமாக உள்ள பூஜா குறித்து அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம்.


Click it and Unblock the Notifications











