இந்தியில் வேகமாக முன்னேற விரும்பும் திரிஷா

தென்னிந்திய கனவு தேவதை என்று இனிமேல் திரிஷா ரசிகர்கள் கூற முடியாது. காரணம், கட்டா மீத்தா இந்திப் படம் மூலம் அகில பாரத அழகியாக மாறியுள்ளார் திரிஷா.
ஏன் இந்த பாலிவுட் விசிட் என்று திரிஷாவிடம் கேட்டால், இந்தியா மட்டுமல்லாமல் உலகம் பூரவாவும் நான் பிரபலமாக வேண்டாமா, அதற்காகத்தான் பாலிவுட்டுக்கு வந்திருக்கிறேன் என்கிறார் புன்னகையுடன்.
கட்டா மீத்தா வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறதாம். இதனால் திரிஷா பூரிப்புடன் இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இனி இந்தியில் கூடுதல் கவனம் செலுத்தப் போகிறேன். அதேசமயம், தொடர்ந்து தமிழ், தெலுங்குப் படங்களிலும் நடிப்பேன். ஆனால் பாலிவுட் பெரியது. பரந்து விரிந்த ரசிகர்களைக் கொண்டது. எனவே சர்வதேச அளவில் நானும் புகழ் பெற பாலிவுட்தான் பெஸ்ட் வழி.
எனவே இதன் மூலம் வேகமாக முன்னேற விரும்புகிறேன் என்றார் திரிஷா.
பிறகு முக்கியமான இன்னொன்றையும் கூறியுள்ளார் திரிஷா. தென்னிந்தியப் படங்களை விட இந்திதான் மிகப் பெரிய திரையுலகமாம்.
பிறகு எதற்கு எடுத்த எடுப்பிலேயே இந்திக்குப் போகாமல் தமிழ்,தெலுங்கு என தடுமாறிக் கொண்டிருந்தார் திரிஷா என்று தெரியவில்லை!


Click it and Unblock the Notifications











