ஜாக்கெட் இல்லாமல் அக்ஷயா!

By Staff

Akshaya
ஜாக்கெட் அணியாத ஓல்டு கெட்டப்பில் நடிக்கிறார் கவர்ச்சியில் எல்லை மீறிக் கலக்கும் அக்ஷயா.

அது என்னமோ தெரியவில்லை... அறிமுகமான கலாபக் காதலன் தொடங்கி இந்த வெள்ளிக்கிழமை ரிலீசான கஜா வரை (ஹிஹிஹி... அதிகமில்லை 3 படங்கள்தான்!)அக்ஷயாவுக்கு வாய்த்தவையெல்லாம் ஏடாகூடமான ரோல்களே.

அக்கா புருஷனை மடக்கும் குடும்பப் பெண்ணாக, தண்ணியடித்துவிட்டு காதலன் பிணத்தின் முன் ஆடும் காதலியாக, கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவியாக... நடித்துக் கொண்டிருந்தவர், அடுத்து நடிக்கப் போகும் படத்தின் பெயர் தசையினைச் தீச்சுடினும்.

இந்தப் படத்தில் கவர்ச்சி ததும்பும் இளம் பெண்ணாகவும், ஜாக்கெட் அணியாத வயதான பெண்ணாகவும் என வெவ்வேறு கெட்டப் உள்ள வேடமாம் அக்ஷயாவுக்கு.

இதுபற்றி அவர் இப்படிக் கூறுகிறார்:

'நான் நடித்த கஜா படம் எனக்கு மேலும் வாய்ப்புகளைப் பெற்றுத் தருமளவு ஓடிக்கொண்டிருக்கிறது.

அதற்குக் காரணம் படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான வி.நடராஜன். அடுத்து நான் நடிக்கும் படம் 'தசையினைத் தீச்சுடினும்...' 1940-ம் ஆண்டுகளில் நடப்பதைப் போன்ற கதை. துணிச்சலான வேடம். ஆனால் நெருப்பு மாதிரி ஒரு பாத்திரம். கதாபாத்திரத்தின் பெயரே பாரதி.

அந்தக் காலத்துப் பெண்கள் அணிவதுபோல பஃப் கை வைத்த ஜாக்கெட்டுடன் இளம் பாத்திரத்திலும், ஜாக்கெட் அணியாமல் வயதான கெட்டப்பிலும் நடிக்கிறேன். ஜாக்கெட் இல்லேன்னா என்ன... நாம நடிக்கிற விதத்துலதான் ஆபாசம் என்பதெல்லாம்.

ஹீரோவாக கூத்துப்பட்டறை தினேஷ் நடிக்கிறார். விஜய் இயக்குகிறார். படத்துக்கான ஒத்திகைக் காட்சிகள் சமீபத்தில் நடந்தது. அடுத்த மாதம் ஷூட்டிங் கிளம்பப் போகிறோம்...' என்கிறார் அக்ஷயா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X