தமிழைத் தவிர்க்கும் ஆசின்

மலையாளத்திலிருந்து தெலுங்குக்குப் போய் பின்னர் அங்கிருந்து தமிழுக்கு வந்து நம்பர் ஒன் நடிகையாக பெயர் வாங்கி இப்போது பாலிவுட்டுக்குள் புகுந்து சிறந்த புதுமுக நடிகை என்ற பிலிம்பேர் விருதையும் வாங்கி அசத்தியுள்ளார் ஆசின்.
கஜினி படம் மூலம் இந்தியில் ஆசினுக்கு இப்போது ஏக கிராக்கி. பல முன்னணி நடிகைகளே பீதியடையும் வகையில் அங்கு வாய்ப்புகளை வாரிக் கொண்டிருக்கிறார்.
இந்திக்குப் போய் விட்டாலும் கூட தமிழ் தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் வந்தால் ஏற்பேன் என்று கூறி வைத்திருந்தார் ஆசின்.
இதை நம்பி அவரை அணுகும் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களை படு டெக்னிக்கலாக பேசி தட்டிக் கழித்து வருகிறாராம் ஆசின்.
முதலி்ல் அவர் கேட்பது, தயாரிப்பாளரால் தரவே முடியாத அளவுக்கு பெரிய சம்பளமாம். நிச்சயம் இந்த சம்பளத்தை அவரால் தர முடியாது என்று உணர்ந்து அந்த சம்பளத்தைக் கேட்கிறார். அப்போதே அந்த தயாரிப்பாளர் இடத்தை காலி செய்து விடுகிறார்.
அதையும் மீறி தயார் என்று யாராவது கூறினால், அதை விட பெரிய மேட்டராக எடுத்து விட்டு தயாரிப்பாளரை கிளம்பச் செய்து விடுகிறாராம்.
இப்போதைக்கு ஆசின் இந்தியை விட்டு வர மாட்டார் என்கிறார்கள் கோலிவுட்டில்.


Click it and Unblock the Notifications











