மீண்டும் விஜய்யுடன் அசின்!

மும்பை ட்ரீம்ஸுடன் போனவருக்கு, இரண்டாவது படமான லண்டன் ட்ரீம்ஸ் கெட்ட கனவாகிவிட, இப்போது இந்தியில் அடுத்த படம் என்னவென்று உறுதியாகாத நிலை.
இந்த நேரத்தில்தான், விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.
ஜெயம் ராஜா இயக்க ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடிப்பது உறுதி என்கிறார்கள்.
இருவரும் மிகவும் வெற்றிகரமான ஜோடி என்ற பெயரெடுத்தவர்கள். விஜய்யின் வெற்றிப் படங்கள் சிவகாசி, போக்கிரி இரண்டிலுமே அசின்தான் ஜோடி.
சமீபத்தில் கலைமாமணி விருது பெற சென்னை வந்தபோது விஜய் படத்தில் நடிப்பது குறித்த பேச்சு வார்த்தை முடிந்து ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டதாகத் தெரிகிறது.
Comments


Click it and Unblock the Notifications