Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அபிஷேக்குடன் இணையும் ஆசின்
ஆமிர்கான், சல்மான் கான் என போய்க் கொண்டிருக்கும் ஆசினின் அடுத்த ஸ்டாப் அபிஷேக் பச்சன் என்பது உறுதியாகியிருக்கிறது.
கலின் ஹம் ஜீ ஜான் சே என்று பெயரிடப்பட்டுள்ள படத்திற்காக அபிஷேக்குடன் இணைகிறார் ஆசின். அசுதோஷ் கோவரிகர் இப்படத்தை இயக்குகிறார். சிட்டகாங் புரட்சி குறித்த கதையாம் இது.
இப்படத்தில் மாஸ்டர்தா என அழைக்கப்படும் சுர்ஜ்யா சென் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அபிஷேக். சுர்ஜ்யா சென்தான் சிட்டகாங் புரட்சியை தலைமையேற்று நடத்தியவர் ஆவார்.
அபிஷேக்கும், ஆசினும், கோவரிகருடன் இணைவது இதுவே முதல் முறையாகும். இந்தப் படத்தை பிவிஆர் பிக்சர்ஸுடன் இணைந்து கோவரிகர் தயாரிக்கவுள்ளார்.
படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நவம்பர் 25ம் தேதி வாக்கில் தொடங்குகிறதாம்.
ஆசின் இந்தியில் 2வதாக நடித்துள்ள லண்டன் ட்ரீம்ஸ் (நாயகன் சல்மான் கான்) படம் அக்டோபர் 30ம் தேதி திரைக்கு வருகிறது. கஜினி என்ற பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து வரும் படம் என்பதால் ரிசல்ட் குறித்து நகத்தை கடித்தபடி காத்திருக்கிறார் ஆசின்.
இந்த நிலையில் அவருடைய 3வது படம் உறுதியாகி விட்டது.
சமீபத்தில்தான் கோவரிகரின் படமான வாட்ஸ் யுவர் ராசி வெளியாகி பெரும் பிளாப் ஆனது. இந்த நிலையில், தனது அடுத்த படத்தை 'சிக்'கென தர தீவிரமாக உள்ளார் கோவரிகர்.