தேனீக்கள் தாக்கி மீரா காயம்!

By Staff

Meera Jasmine
ஆந்திர மாநிலம் கேசம்பேட்டை என்ற இடத்தில் நடந்த படப்பிடிப்பின்போது தேனீக்கள் கொட்டியதில் நடிகை மீராஜாஸ்மின் உள்ளிட்ட படக்குழுவினர் காயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ், மலையாளத்தில் பிரபலமாக உள்ள மீரா ஜாஸ்மின் தெலுங்கிலும் தீவிரமாக நடித்து வருகிறார். தற்போது கோரிண்டகு என்ற தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் மீரா.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் கேசம்பேட்டை என்ற கிராமத்திற்கு அருகே இன்று காலை நடந்தது.

அப்போது படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு அருகே உள்ள மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் திடீரென கூட்டமாக படையெடுத்து வந்தன. பின்னர் மீரா ஜாஸ்மினையும், படக்குழுவனரையும் தாக்கி கொட்டத் தொடங்கின.

இதனால் மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் வலி பொறுக்க முடியாமல் கதறித் துடித்தனர். உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பின்னர் வலியால் அலறித் துடித்த மீரா ஜாஸ்மின் மற்றும் படக்குழுவைச் சேர்ந்த 6 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவலைப்படும்படி ஒன்றும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

படக்குழுவைச் சேர்ந்த சிலர் தேன் கூட்டைக் கலைத்து விட்டதால்தான் தேனீக்கள் படையெடுத்து வந்து கொட்டிக் குதறி விட்டதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X