கரீனாவுக்கு 4 கோடி!

லேட்டஸ் புள்ளிவிவரப்படி நடிகைகளிலேயே கரீனா கபூர்தான் பெருமளவில் சம்பளம் வாங்குகிறாராம். நடிகர்களில் சல்மான் கான் முதலிடத்தில் இருக்கிறாராம்.
இந்த திடீர் சம்பள உயர்வுக்கு சமீப காலமாக பாலிவுட்டில் வெளியாகும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களே காரணம் என்கிறார்கள். அதிலும் 3 இடியட்ஸ், தபாங் ஆகியவை மிகப் பெரிய அளவிலான ஹிட் படங்களாக அமைந்ததோடு மிகப் பெரிய வருவாயையும் ஈட்டிக் கொடுத்துள்ளது. 8 மாதகாலத்திற்குள் இந்த இரு படங்களும் ரூ. 100 கோடிக்கு மேல் வருவாயை ஈட்டித் தள்ளியுள்ளதால் பாலிவுட் பெரும் உற்சாகமடைந்துள்ளது, பணமும் பெருமளவில் புழங்கத் தொடங்கியுள்ளதாம்.
இதையடுத்து நடிகர், நடிகையரின் சம்பளமும் வெகுவாக உயர ஆரம்பித்துள்ளது.
நடிகர்களைப் பொறுத்தவரை சல்மான் கான் ரூ. 21 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஆமிர்கான், ஷாருக்கான் இதில் பின்தங்கியுள்ளனர். ஆமிர்கான் தனது 3 இடியட்ஸ் படத்தின் லாபத்தில் ஒரு பங்கைப் பெற்றார். அதுவே ரூ. 50 கோடி என்கிறார்கள். ஷாருக்கான் தற்போது தனது சொந்தத் தயாரிப்பில் ஆர்ஏ ஒன் என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இதில் வரும் வருமானம் முழுவதும் அவருக்கே போய் விடும்.
நடிகைகளைப் பொறுத்தவரை கரீனா கபூர்தான் நம்பர் ஒன் சம்பள நடிகை. ஏஜென்ட் வினோத் படத்திற்கும், பாடிகார்ட் படத்திற்கும் அவர் பெற்ற சம்பளம் ரூ. 4 கோடி. காத்ரீனா கைப் ரூ.3 கோடி சம்பளம் வாங்குகிறார்.
சைப் அலி கான் ரூ. 13 கோடி சம்பளம் வாங்குகிறாராம். ஷாஹித் கபூருக்கு ரூ. 8 முதல் 9 கோடி வரையில் சம்பளம் உள்ளது.
முன்னணி இயக்குநர்களுக்கும் பெருமளவில் சம்பளம் தருகிறார்கள். சஞ்சய் லீலா பன்சாலி ரூ. 30 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம் குஸாரிஸ் படத்துக்காக. ஒரு படம் ஹிட்டடித்து விட்டால் கூட போதும், அந்த இயக்குநருக்கு குறைந்தது ரூ. 9 கோடி சம்பளம் தருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











