சார்மியின் கிளாமர் 'மந்த்ரா'!

தமிழில் அறிமுகமான சார்மிக்கு, திறம்பட கவர்ச்சி காட்டியும் வாய்ப்புகள சரிவர இல்லை. இதனால் தெலுங்குக்கு இடம் பெயர்ந்தார் சார்மி. அங்கு இவரது கவர்ச்சிக்கு ஆரவார வரவேற்பு கிடைக்கவே அங்கேயே தங்கி விட்டார் சார்மி.
முன்னணி நாயகிகளின் படமாக இருந்தாலும் சார்மிக்கும் ஒரு கேரக்டர் வைத்து கவர்ச்சி காட்ட வைக்கின்றனர். அந்த அளவுக்கு சார்மிக்கு அங்கு ஏக கிராக்கி.
இந்த நிலையில், மந்த்ரா என்ற படத்தில் சார்மி இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமர் காட்டியுள்ளாரம். படம் முழுக்க சார்மியின் கிளாமர் புயல்தானாம். இப்படம் திகிலும், சஸ்பென்ஸும் கலந்த கதையாம்.
இப்படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிடவுள்ளனர். அடுத்த மாதம் தமிழ் மந்த்ரா திரைக்கு வருகிறதாம்.
சார்மியை மீண்டும் தமிழுக்குக் கூட்டி வர சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்தான் தெலுங்கே போதும் என்ற முடிவில் இருக்கிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications