twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சார்மியின் கிளாமர் 'மந்த்ரா'!

    By Staff
    |

    Charmi
    சிம்புவின் முதல் நாயகியாக, காதல் அழிவதில்லை படத்தில் சிக்கென அறிமுகமாகி, சிக்கன உடையில், தெலுங்குத் திரையுலகை கலக்கிக் கொண்டிருக்கும் சார்மி, மந்த்ரா என்ற படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில், புதுப் புரட்சி படைத்துள்ளாராம்.

    தமிழில் அறிமுகமான சார்மிக்கு, திறம்பட கவர்ச்சி காட்டியும் வாய்ப்புகள சரிவர இல்லை. இதனால் தெலுங்குக்கு இடம் பெயர்ந்தார் சார்மி. அங்கு இவரது கவர்ச்சிக்கு ஆரவார வரவேற்பு கிடைக்கவே அங்கேயே தங்கி விட்டார் சார்மி.

    முன்னணி நாயகிகளின் படமாக இருந்தாலும் சார்மிக்கும் ஒரு கேரக்டர் வைத்து கவர்ச்சி காட்ட வைக்கின்றனர். அந்த அளவுக்கு சார்மிக்கு அங்கு ஏக கிராக்கி.

    இந்த நிலையில், மந்த்ரா என்ற படத்தில் சார்மி இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமர் காட்டியுள்ளாரம். படம் முழுக்க சார்மியின் கிளாமர் புயல்தானாம். இப்படம் திகிலும், சஸ்பென்ஸும் கலந்த கதையாம்.

    இப்படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிடவுள்ளனர். அடுத்த மாதம் தமிழ் மந்த்ரா திரைக்கு வருகிறதாம்.

    சார்மியை மீண்டும் தமிழுக்குக் கூட்டி வர சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்தான் தெலுங்கே போதும் என்ற முடிவில் இருக்கிறாராம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X