கவர்ச்சிக்கு தடையே இல்லை - நேஹா

பாலிவுட்டின் கவர்ச்சிப் புயல்களில் ஒருவரான நேஹா தூபியா சமீப கால படங்கள் சிலவற்றில் பெரிய அளவில் கவர்ச்சி காட்டவில்லை. இதனால் இனிமேல் கவர்ச்சியாக நடிக்க மாட்டாரோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது.
ஆனால் கேரக்டருக்குத் தேவை என்றால் கிளாமராக நடிக்க தயங்கவே மாட்டேன் என்று கூறி ரசிகர்கள் நெஞ்சில் பால் வார்த்துள்ளார் நேஹா.
மித்யா என்ற படத்தில் தாதாவின் செட்டப் வேடத்தில் நடித்துள்ளார் நேஹா. படு கிளாமரான ரோலாம் இது.
முன்பு போல கிளாமரைக் காணாமோ என்று நேஹாவிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. கேரக்டருக்குத் தேவைப்பட்டால் கிளாமராக, கவர்ச்சியாக நடிக்கத் தயார்.
கேரக்டருக்கு அந்த கிளாமர் நியாயம் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நடிக்க மாட்டேன்.
காட்சியுடன் பொருந்தாத கிளாமர் ஆபாசமாகி விடும். அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்கிறார் நேஹா.
நேஹா நடிக்க வந்த புதிதில், பாலிவுட்டில் செக்ஸும், ஷாருக் கானும் மட்டும்தான் விலை போகிறது என்று பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











