மீண்டும் நடிக்க வரும் ஜோ?

ஆம், சூர்யாவைத் திருமணம் செய்து கொண்டு திரையுலக தொடர்பே வேண்டாம் என்று போனவர், இப்போது குழந்தை பிறந்து ஒரு வருடம் நிறைவடைந்ததும், நடிக்க வரும் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் ஒரு கடைத் திறப்பு விழாவில் பங்கேற்ற ஜோதிகாவிடம், மீண்டும் சினிமாவில் நடிப்பது குறித்து நிருபர்கள் கேட்டபோது, அதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.
மொழி மாதிரி ஒரு பட வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் எனது திரையலக மறுபிரவேசம் குறித்து முடிவு செய்யத் தயாராக உள்ளேன். மற்றபடி வழக்கமான பாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை என்றார்.
வித்தியாசமான கதை தயாரா இயக்குநர்களே...!
Comments


Click it and Unblock the Notifications