காஜல் தங்கச்சி பராக், பராக்!

பொம்மலாட்டம்தான் காஜலின் முதல் படம். ஆனால் அது வெளியாக தாமதமாகவே, 2வதாக நடித்த பழனி படம் முந்தி வந்து அவரை பிரமாதமாக அறிமுகப்படுத்தி விட்டது.
இதையடுத்து சரோஜா படத்திலும் தலை காட்டினார் காஜல். இப்போது அவரது அழகிய தங்கச்சி நிஷா அகர்வாலும் நடிக்க வருகிறாராம்.
அகர்வால் பவன் ஸ்வீட் போல பட் க்யூட்டாக இருக்கிறார் நிஷா. நிஷாவைப் பார்த்த திரையுலகினர் பலரும் நீங்களும் நடிக்கலாமே என்று நிஷாவைக் கேட்க அவரோ அப்பா அகர்வாலை கையைக் காட்டினாராம்.
அப்பாவுக்கும் நிஷா நடிப்பதில் ஆட்சேபனை இல்லையாம். நிஷாவும் இப்போது சம்மதித்து விட, அக்காவின் ஆசியோடு நடிக்க வருகிறார் நிஷா.
காஜல் தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்தவர். ஆனால் நிஷாவோ டைரக்டாக தமிழுக்கு வருகிறாராம். அதேசமயம், சைடில் தெலுங்கிலும் ஒரு படத்தை ஒத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.
அந்தக் கால அம்பிகா, ராதா போல சேர்ந்து நடிப்பீர்களா என்று கேட்டால், நல்ல வாய்ப்பு வந்தால் சேர்ந்து கலக்கத் தயார் என்கிறார் காஜல்.


Click it and Unblock the Notifications











