வயசு... 'மாட்டிக்கிட்ட' கங்கணா!!

ஆனால் சமீப காலமாக இளம் நடிகர் நடிகைகள் தங்கள் வயதை மறைக்காமல் சொல்வதாக கூறிக்கொண்டு, பொய் சொல்லி வருகிறார்கள். உண்மை அம்பலமான பிறகு அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் தனக்கு 25 வயதுதான் ஆகிறது என சொல்லிக்கொண்டிருந்தார்.
ஆனால் அவரது உண்மையான வயது 32 என்பதை ஆதாரத்தோடு வெளியிட்டது ஒரு ஆங்கில பத்திரிகை. அத்தோடு அம்மணி பிறந்த நாளன்று கேக் சாப்பிட மட்டுமே வாயைத் திறப்பது என முடிவு செய்து கொண்டார்!
இப்போது அம்பலத்தில் அசிங்கப்பட்டு நிற்பவர் தாம் தூம் புகழ் கங்கனா ரனவத். இந்தி சினிமாவில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் இவர் நடித்து வருகிறார். ஆனால் இந்த ஆண்டுதான் தனது பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாடினார். சமீபத்தில் நட்சத்திர ஓட்டலில் இதற்கான விழாவை கோலாகலமாக நடத்தினார். இதில் முன்னணி இந்தி சினிமா கலைஞர்கள் பலரும் பங்கேற்றனர். அப்போது தனக்கு வயது 22 தான் என மீடியாவிடம் கூறினார் கங்கனா.
ஆனால் அவரது உண்மையான வயது 28 என்பது இப்போது அம்பலமாகிவிட்டது. கங்கனாவின் பாஸ்போர்ட்டில் அவரது பிறந்த வருடம் 1981 என உள்ளது. அந்தக் கணக்குப்படி இப்போது அவருக்கு 28 வயது என அவரது உறவினர் ஒருவர் உண்மையை உளறிவிட, மீடியாவில் அசிங்கப்பட்டுப் போனார் கங்கணா.
எத்தனை வருடங்கள் ஆனாலும் சினிமாவில் நடிகைகளின் வயது 18 முதல் 22-க்குள்தான்!


Click it and Unblock the Notifications











