நயன் படத்தைப் பிடித்த காவ்யா!

மலையாளத்திலிருந்து கிளம்பி தமிழுக்கு வந்து அப்படியே தெலுங்குக்கும் போய், இப்போது இரு மொழிகளிலும் கிளாமர் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் நயனதாரா.
ஆரம்பத்தில் அம்சமாக வந்து போன நயனதாரா இப்போது அல்ட்ரா மாடர்ன் கிளாமரில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மலையாளத்தில் திலீப்புடன் பாடிகார்ட் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
தமிழிலும், தெலுங்கிலும் ஒரு கோடி சம்பளத்தைப் பிடித்து விட்ட நிலையில் மலையாளத்தில் அப்படியெல்லாம் தர மாட்டார்கள் என்பதால், வெறும் 15 லட்சத்துக்கு ஒத்துக் கொண்டார் நயனதாரா.
இந்த நிலையில் அவருக்குப் பதில் காவ்யா மாதவன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சித்திக்தான் இந்தப் படத்தின் இயக்குநர். படத்துக்காக நயனதாராவை அணுகவே இல்லை என்று சித்திக் இப்போது கூறுகிறார். நான் காவ்யா மாதவனைத்தான் அணுகிக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார் அவர்.
என்ன நடந்ததோ தெரியலையே..!


Click it and Unblock the Notifications











