இந்தியில் லட்சுமி ராய்

லட்சுமி ராய் நடிக்கும் படங்களை விட அவரைப் பற்றி உலா வரும் வதந்திகள்தான் அதிகம். அந்த அளவுக்கு அவர் குறித்து ஏதாவது ஒரு செய்தி வந்துகொண்டுதான் உள்ளது. அவர் நடிக்கும் படத்தைத்தான் காணோம்.
இந்த நிலையில் இந்தியில் நடிக்கப் போகிறாராம் லட்சுமி ராய். இதில் அவருக்கு ஜோடி பழம் பெரும் நடிகர் சன்னி தியோல் என்கிறார்கள்.
அப்படியா என்று லட்சுமியிடம் கேட்டால், யார் தான் இப்படி கிளப்பி விடுகிறார்களோ தெரியவில்லை. நான் இந்தியில் நடிக்கப் போவது உண்மைதான். ஆனால் சன்னி தியோல் ஹீரோ இல்லை என்று கூறுகிறார் லட்சுமி.
இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் தொடங்கப் போகிறதாம்.
அதுக்குள்ள ஹீரோ யாருன்றதை கண்டுபிடிச்சுடலாம்.
Comments


Click it and Unblock the Notifications