twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியில் லட்சுமி ராய்

    |

    Lakshmi Rai
    டோணி புகழ் லட்சுமி ராய் இந்தியில் காலடி எடுத்து வைக்கிறார். இதில் அவருக்கு ஜோடி சன்னி தியோல் என பேச்சு அடிபடுகிறது. ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்கிறார் லட்சுமி.

    லட்சுமி ராய் நடிக்கும் படங்களை விட அவரைப் பற்றி உலா வரும் வதந்திகள்தான் அதிகம். அந்த அளவுக்கு அவர் குறித்து ஏதாவது ஒரு செய்தி வந்துகொண்டுதான் உள்ளது. அவர் நடிக்கும் படத்தைத்தான் காணோம்.

    இந்த நிலையில் இந்தியில் நடிக்கப் போகிறாராம் லட்சுமி ராய். இதில் அவருக்கு ஜோடி பழம் பெரும் நடிகர் சன்னி தியோல் என்கிறார்கள்.

    அப்படியா என்று லட்சுமியிடம் கேட்டால், யார் தான் இப்படி கிளப்பி விடுகிறார்களோ தெரியவில்லை. நான் இந்தியில் நடிக்கப் போவது உண்மைதான். ஆனால் சன்னி தியோல் ஹீரோ இல்லை என்று கூறுகிறார் லட்சுமி.

    இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் தொடங்கப் போகிறதாம்.

    அதுக்குள்ள ஹீரோ யாருன்றதை கண்டுபிடிச்சுடலாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X