லஷ்மி ராய் மலையாளத்தில் பிசி

ஹரிஹகர் நகர் என்ற பெயரில் வெளியான படத்தின் 2ம் பாகம் இது. மலையாளத்தின் மிகச் சிறந்த நகைச்சுவைப் படங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
முகேஷ், சித்திக், அசோகன், ஜெகதீஷ் ஆகியோர் பழைய ஹரிஹகர் படத்தில் நடித்திருந்தனர். 18 வருடங்களுக்குப் பிறகு இப்படத்தின் 2ம் பாகத்தை தயாரித்துள்ளனர்.
முதல் படத்தில் இளைஞர்களாக இருந்த இந்த நால்வரும் இப்போது 40 வயதுகளில் இருப்பவர்களாக வருகின்றனர். திருமணமாகி சந்தோஷமாக வாழ்ந்து வரும் இவர்களின் வாழ்க்கையில் லஷ்மி ராய் குறுக்கிடுகிறார். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதை காமடியாக படமாக்கியுள்ளனராம்.
சித்திக்-லால் இரட்டை இயக்குநர்களில் ஒருவரான லால் இப்படத்தை இயக்கியுள்ளார். முதல் படத்தை சித்திக்கும், லாலும் இணைந்து இயக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











