லட்சுமி ராய்... வாயோடு வாய்!

By Staff

Lakshmi Roy
என்னை எல்லாரும் முத்த நடிகை என்று குறிப்பிடுவது வருத்தமாக உள்ளது. தாம் தூம் படம் அந்த இமேஜை மாற்றும் என்று கூறியுள்ளார் நடிகை லட்சுமி ராய்.

ஜெயம் ரவியுடன் லட்சுமிராய் நடித்துள்ள தாம்தூம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் முத்தக் காட்சிகளில் நடித்து பரபரப்பேற்படுத்தியுள்ளதாக லட்சுமிராய் பற்றி கடந்த சில தினங்களாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இதுகுறித்து லட்சுமிராய் சமீபத்தில் அளித்துள்ள விளக்கம்:

நான் இதுவரை நடித்த படங்களிலேயே முழுமையான உடையில் நடித்திருக்கும்(!) படம் தாம்தூம். இந்தப் படத்தில நான் ஒரு டாக்டர். ஒரு காட்சியில் ஜெயம் ரவி சைபீரியாவின் ஐஸ் வாட்டரில் விழுந்து விடுவார். அவரைக் காப்பாற்ற முதலுதவி செய்வதற்காக, வாயோடு வாய் வைத்து ஆக்ஸிஜனை அவர் உடலுக்குள் செலுத்துகிறேன்.

இது எப்படி முத்தக் காட்சியாகும்?

இப்படித்தான் தேவையில்லாமல் என் பெயரை சேதப்படுத்துகிறார்கள், என சிணுங்குகிறார் அம்மணி.

முதலுதவிக்கும், முத்தத்திற்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு தமிழ் ஜனங்க இருக்காங்களே??

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X