'மகா' மாளவிகா!

வாள மீனுக்கு முன்பு வரை மாளவிகாவின் மார்க்கெட் பெரிதாக இல்லை. ஆனால் வாளமீனு பாட்டுக்குப் பின்னர் மாளவிகாவுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள்.
விதம் விதமான கேரக்டர்களில் ரசித்து நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென காதலும், கல்யாணமும் செட்டாகி விடவே கல்யாணம் செய்து கொண்டு விட்டார்.
இப்போது குழந்தையும் பிறந்து தாயாகியும் விட்டார். இருப்பினும் மீண்டும் நடிக்க வரும் ஆர்வத்தில் உள்ளார். ஆனால் அவருக்கு அவரது உடல் எடை பெரும் பிரச்சினையாகியுள்ளதாம்.
எதிர்பாராத வகையில் உடல் எடை பெருகிப் போய் விட்டதாம். அவரையே அவருக்கு அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடை மாறிப் போய் விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பெருகிப் போன எடையை குறைக்க பலவிதமான உடற் பயிற்சிகளில் இறங்கியுள்ளாராம் மாளவிகா. ஆனாலும் எடைதான் குறைந்தபாடில்லையாம்.
எப்படிக் குறைப்பது இடையை என்று பெரும் கவலையில் உள்ளாராம் மாளவிகா.
சிம்ரனிடம் ஒரு வார்த்தை கேட்டுப் பார்க்கலாமே மாளு?


Click it and Unblock the Notifications











