சிலம்பம் கற்கும் மீனாட்சி!

By Staff

Meenakshi
மிருகம் இயக்குநர் சாமி, அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார். சரித்திரம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக மீனாட்சி நடிக்கிறார். படத்துக்காக சிலம்பாட்டம் கற்று வருகிறாராம் மீனாட்சி.

மிருகம் படத்தை முடித்த சாமி, அப்படத்தின் ஷூட்டிங்கின்போது நாயகி பத்மப்ரியாவை கன்னத்தில் அறைந்ததாக சர்ச்சையில் சிக்கினார். இதனால் அவருக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் சாமியின் கோரிக்கையை ஏற்று சமீபத்தில் அந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டார் சாமி. படத்திற்கு சரித்திரம் என பெயரிட்டுள்ளார்.

தனது நாயகி சிலம்பாட்டம் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்பதில் சாமி உறுதியாக இருந்ததால், ஷூட்டிங்கைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கருப்பசாமி குத்தகைதாரர் பட நாயகி மீனாட்சியை இறுதி செய்துள்ளார் சாமி.

கருப்பசாமிக்குப் பிறகு மீனாட்சிக்கு சரியான வாய்ப்பு அமையவில்லை. இந்த நிலையில் சாமி கூறிய கதை மீனாட்சிக்குப் பிடித்ததால் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டாராம். இருந்தாலும் மீனாட்சிக்கு சிலம்பாட்டம் தெரியாது. எனவே விரைவில் சிலம்பாட்டம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளாராம் சாமி.

இதையடுத்து சிலம்பம் கற்க ஆரம்பித்துள்ளார் மீனாட்சி. அதுகுறித்து அவர் கூறுகையில், சாமி கூறிய கதையைக் கேட்டதும், இதுதான் நான் அடுத்து நடிக்கப் போகும் தமிழ்ப் படம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். கதை அந்த அளவுக்கு வெயிட்டாக உள்ளது.

சாமி உண்மையிலேயே வித்தியாசமான இயக்குநர். இதுவரை இப்படி ஒருவரை நான் பார்த்ததே இல்லை.

இப்படத்துக்காக நான் சிலம்பம் கற்று வருகிறேன். இது வித்தியாசமான அனுபவமாக உள்ளது என்றார் அவர்.

அப்ப, சாமி 'அடிச்சா' மீனாட்சிக்கு கவலை இல்லை. கையில் தான் சிலம்பம் இருக்கே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X