நவ்யா பெயர் தமிழரசி!

By Staff

Navya Nair
சில நேரங்களில் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களை தரிசிக்க வந்துள்ள நவ்யா நாயர், அடுத்து அவள் பெயர் தமிழரசி என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

பார்த்தவுடனேயே பச்செக்கன மனதில் வந்து ஒட்டிக் கொள்ளும் அழகு முகம் நவ்யாவுக்கு. நடிப்பிலும் அப்படித்தான்.

மாயக்கண்ணாடிக்குக் கிடைத்த பெரும் தோல்வியால் சங்கடத்துடன் இருந்து வந்த நவ்யாவுக்கு, லேட்டஸ்டாக வெளியான சிலநேரங்களில் நல்ல பிரேக் கொடுத்துள்ளது. மறுபடியும் சந்தோஷ முகத்துக்கு மாறியுள்ளார் நவ்யா.

இந்த நிலையில் அடுத்த தமிழ் படத்திற்கு ஆயத்தமாகி விட்டார் நவ்யா நாயர். மோசர்பெயர் நிறுவனம் தயாரிக்கவுள்ள அவள் பெயர் தமிழரசி என்ற படத்தில் தமிழரசி என்ற கேரக்டரில் நவ்யா நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக புதுமுக ஹீரோ நடிக்கவுள்ளார். மீரா கதிரவன் இயக்கவுள்ளார்.

இப்படம் தனக்கு பெரும் திருப்புமுனையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் கூறுகிறார் நவ்யா. இந்தப் படம் தவிர ஸ்ரீகாந்த்துடன் எட்டப்பன் படத்திலும் நவ்யா நடிக்கிறார். இதையும் மோசர்பெயர் நிறுவனம்தான் தயாரிக்கிறது.

தமிழ் தவிர மலையாளத்திலும், கன்னடத்திலும் கூட பிசியாக இருக்கிறார் நவ்யா. மலையாளத்தில் 3 படங்கள் உள்ளதாம். கன்னடத்தில் தர்ஷனுடன் அவர் நடித்த ஒரு படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதாம்.

இதுபோதாதென்று படிப்பிலும் படு பிசியாக உள்ளார் நவ்யா. சேச்சி இப்போது எம்.பி.ஏ படித்து வருகிறார். இதனால் தமிழில் ஹிட் ஆகியுள்ள சில நேரங்களில் படத்தையும், கன்னடப் படத்தையும் பார்க்க அவருக்கு நேரம் இல்லையாம்.

நான் இன்னும் இரு படங்களையும் பார்க்கவில்லை. படிப்பில் பிசியாக இருக்கிறேன். இதனால் கடந்த சில மாதங்களாகவே நான் படம் எதையும் பார்க்கவில்லை. படிப்பு முடிந்ததும் சென்னையில் தங்கி விட்டுப் போன அத்தனைப் படங்களையும் பார்க்கப் போகிறேன் என்கிறார் அழகுச் சிரிப்புடன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X