தென்னிந்தியாவின் காஸ்ட்லி நடிகை!

By Staff

Nayantara
தென்னிந்திய சினிமாவின் காஸ்ட்லி நடிகை எனும் பெருமையைப் பெற்றிருக்கிறார் நடிகை நயன்தாரா, லிங்குசாமியின் புதுப்படத்தில் ஒப்பந்தமானதன் மூலம்.

இந்தப் படத்தில் அவர் பருத்தி வீரன் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். ஆரம்பத்தில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இந்த வாய்ப்பை ஒப்புக் கொளஅவதா வேண்டாமா என்று யோசித்த நயன், பின்னர் லிங்குசாமி சொன்ன சம்பளத் தொகையைக் கேட்டதும், 60 நாட்கள் மொத்தமாகக் கால்ஷீட்டுகளை அள்ளிக் கொடுத்துவிட்டாராம்.

எவ்வளவு என்கிறீர்களா...

வாயைப் பிளக்காதீர்கள்... ரூ.1.5 கோடி!!

தென்னிந்திய திரையுலகில் எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாகப் பெற்றதில்லை. ரஜினியுடன் நடிக்க ரோபோவுக்கு ரூ.6 கோடி வாங்கியுள்ள ஐஸ்வர்யாவை இதில் சேர்க்க முடியாது.

இது குறித்து நயன்தாராவிடம் கேட்டபோது, சம்பளம் எவ்வளவு என்பது என் பர்சனல் விஷயம். ஆனால் இந்தப் படத்தின் கதை அற்புதமாக இருந்தது. ஆக்ஷன், காமெடி, காதல் மூன்றையும் அத்தனை அற்புதமாகக் கலந்திருந்தார் இயக்குநர். மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கிறேன், கார்த்தியுடன் ஜோடி சேர..., என்கிறார்.

பருத்தி வீன் என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்திருக்கும் கார்த்திக்கு இந்தப் படத்தில் 2.5 கோடி ரூபாய் சம்பளமாம்.

என்னமோ போங்க... பணவீக்கம், பணப் புழக்கமில்லைன்னு விதவிதமா சொல்றாங்க. ஆனா சினிமா உலகத்துல அப்படி ஒரு விஷயம் இருப்பதாகவே தெரியலையே...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X