கிளாமரை விரும்பும் நிக்கோல்

By Staff

Nicole
கிளாமர் காட்டி நடிக்க எனக்கு ஒருபோதும் ஆட்சேபனை இல்லை என்று ஓபன் ஸ்டேட்மென்ட் விட்டுள்ளார் நிக்கோல்.

அடடா என்ன அழகு படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளார் நிக்கோல். ஆனால் கன்னடத்தில் அம்மணி 3 படங்களில் தலை காட்டிய அனுபவசாலி.

நன்கு தமிழ் பேசக் கூடியவரான நிக்கோல், படித்தது, வளர்ந்தது எல்லாம் புனேவில்தானாம். இருந்தாலும் பிறந்தது நம்ம சிங்காரச் சென்னையில். எனவேதான் இந்த தமிழ் டச்.

இவரது தந்தை தேவாவின் இசைக்குழுவில் இடம் பெற்றிருந்த ரிக்கி டிகோஸ்டா. அவர் மூலம்தான் நிக்கோலுக்கு சினிமா ஆசை துளிர் விட்டதாம். சரியான சமயம் பார்த்து வாய்ப்பளித்தது கன்னடம்தான். அங்கு தலை காட்டிய அவரது கிளாமர் திறமையைப் பார்த்து வந்ததுதான் அடடா என்ன அழகு.

இப்போது தமிழில் மட்டும் 2 படங்கள் கையில் இருக்கிறதாம். தீபக்குடன் ஆறுமனமே, பிரசன்னாவுடன் நாய்க்குட்டி என பிசியாக இருக்கிறார் நிக்கோல்.

அபார அழகுடன் காணப்படும் நிக்கோல், கிளாமருக்கு பச்சைக்கொடி காட்டுகிறார். அடடா என்ன அழகு படத்திலேயே கிளாமரை அள்ளி இறைத்திருக்கிறாராம். தொடர்ந்தும் கிளாமராகவே நடிப்பேன் என்றும் கூறுகிறார்.

தமிழில் நிலை பெற்ற பின்னர் அப்படியே இந்திக்கும் ஜம்ப் ஆகும் ஐடியாவில் இருக்கிறாராம் நிக்கோல்.

அடடா என்ன அழகு படத்தின் ஸ்டில்களைப் பார்க்கும்போது நிக்கோல் எந்த ரேஞ்சுக்கும் போவார் என்பது தாராளமாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X