பள்ளிக்கூடம் தொடங்கும் ரம்பா!!

இந்தப் படம் குறித்து ரம்பா கூறுகையில்,
விடியும் வரைக் காத்திரு மிக விறுவிறுப்பான திரைக்கதை. இலங்கையில் சில காட்சிகளை எடுத்திருக்கிறோம். இன்னும் இரு பாடல் காட்சிகள் பாக்கியுள்ளன. பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன்.
என் பயமெல்லாம் மக்களைப் பற்றித்தான். சில வருட இடைவெளிக்குப் பிறகு என்னை இப்போதுதான் பார்க்கிறார்கள். இதனால் எனக்கு வரவேற்பு எப்படி இருக்குமென்று தெரியவில்லை. கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு நடிக்கிறேன்.
எனக்கு இரண்டாவது ஹீரோயின் வேடம் கொடுப்பதாக எத்தனையோ முன்னணி இயக்குநர்கள் வந்தார்கள். ஆனால் அவர்களுக்கு நான் பெரிய கும்பிடாகப் போட்டு அனுப்பி விட்டேன்.
எத்தனை நாளானாலும் மீண்டும் தனி நாயகியாகத்தான் நடிப்பது என்று முடிவு செய்துவிட்டேன். அதனால்தான் இந்த இடைவெளி.
ராமன் தேடிய சீதையில்கூட நான்தான் நடிப்பதாகத் தான் இருந்தது. ஆனால் அந்தப் படத்தில் 5 ஹீரோயின்கள்... இரண்டாவது ஹீரோயினாகவே நடிக்க விரும்பாத நான் நாலுபேரில் ஒருத்தியாக நடிக்க முடியுமா. அதனால் ஒப்புக் கொள்ளவில்லை.
சென்னையில கூடிய விரைவிலேயே ஒரு பள்ளிக் கூடம் திறக்கப் போறேன். 5-ம் வகுப்பு வரைக்கும் இங்கிலீஷ் மீடியம் பிரைமரி ஸ்கூலாக அது இருக்கும். நான் 10ம் வகுப்பு வரைதான் படித்துள்ளேன். மற்றவர்கள் படிக்க என்னால் ஆன சின்ன முயற்சி இது என்றார்.
உயர்ந்த எண்ணம்தான்.


Click it and Unblock the Notifications











