'பொம்பளை' ஹ்ரித்திக்.. ராணி!

ராணியை வைத்து 3 படங்களை இயக்கியவர் கோலி. ராணி முகர்ஜியின் நடிப்பில் குணால் கோலி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தோடா பியார் தோடா மேஜிக். இப்படத்தில் ராணியின் நடிப்பு பேசப்பட்டாலும் படம் பெரிய அளவில் போகவில்லை.
இருந்தாலும் ராணியின் நடிப்பு குறித்து குணால் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கிருஷ் படத்தில் ஹ்ருத்திக் ரோஷன் நடித்ததற்கு சற்றும் சளைக்காத நடிப்பை தோடா பியார் படத்தில் காட்டியுள்ளார் ராணி முகர்ஜி. அவர் ஒரு பொம்பளை ஹ்ருத்திக்.
ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்க அவர் கொஞ்சம் கூட பயப்படவே இல்லை. தண்ணீரில் ரோலர் கோஸ்டர், சைக்கிளிங் உள்பட பல சாகசங்களை அவர் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் கொஞ்சம் கூட பயப்படாமல் கலக்கலாக நடித்துக் கொடுத்தார் என்று புகழ்ந்து தள்ளுகிறார் கோலி.
Comments


Click it and Unblock the Notifications