twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்திக்காக இளைத்த சதா

    By Staff
    |

    Sadha
    பார்க்க கொலு பொம்மை போல கோலாகலமாக இருந்த சதா இப்போது மெலிந்து, இளைத்துப் போய் காணப்படுகிறார். எல்லாம் இந்திப் படங்களில் நடிப்பதற்காகவாம்.

    ஜெயம் படம் மூலம் ஒரேயடியாக உச்சத்திற்குப் போனவர் சதா. ஆனால் நேரமோ என்னவோ அந்நியனுக்குப் பிறகு தமிழுக்கு அந்நியப்பட்டுப் போனார். அதன் பின்னர் சில படங்களில் நடித்தும் கூட தமிழில் அவர் தேறவே இல்லை.

    இப்போது தமிழை மட்டும் நம்பாமல் இந்தியிலும் தேட்டையைப் போட்டுக் கொண்டிருக்கிறார் சதா. இந்திக்கேற்றபடி தன்னையும் பல வகைகளில் மாற்றிக் கொண்டிருக்கிறார்.

    முதல் காரியமாக உடல் எடையை கடுமையாக குறைத்து விட்டார். முன்பெல்லாம் 55 கிலோ வரை இருப்பாராம். இப்போது அதில் பத்து கிலோவை குறைத்து விட்டார். இதனால் பார்க்க படு ஸ்லிம்மாக காணப்படுகிறார் சதா.

    இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் இப்படிப்பட்ட 'இளைப்பை' தாங்க மாட்டார்களே என்று கேட்டால், என்ன செய்வது, இந்தியில் இப்படித்தான் எதிர்பார்க்கிறார்கள் என்கிறார் சதா.

    மாதவனுடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் சதா, இப்படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவேன் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

    மார்க்கெட் இளைக்காமல் இருந்தால் சரிதான்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X