மீண்டும் பிரஷாந்த்துடன் சினேகா

விரும்புகிறேன் படம்தான் சினேகாவுக்கு முதல் படம். அதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பிரஷாந்த். அதன் பின்னர் சில காலம் கழித்து இன்னொரு படத்தில் இருவரும் இணைந்தனர். இப்போது இருவரும் மறுபடியும் இணையப் போகின்றனர் - பொன்னர் சங்கர் படத்திற்காக.
கலைஞர் கருணாநிதி எழுதிய கதைதான் பொன்னர் சங்கர். இந்த நாவல் தியாகராஜன் தயாரித்து இயக்க, பிரஷாந்த் நடிப்பில் உருவாகிறது. பிரமாண்டமாக தயாரிக்கப்படவுள்ள இப்படத்தில் சினேகாவை நடிக்க வைக்கிறார் பிரஷாந்த். அருக்காணி என்ற கேரக்டரில் சினேகா நடிக்கவுள்ளாராம்.
சமீபத்தில் முதல்வர் கருணாநிதியை சினேகாவும், அவரது தாயாரும் சென்று சந்தித்தனர். தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்ததற்காக இந்த சந்திப்பு நடந்தது. சந்திப்பின்போது பிரஷாந்த்தும் உடன் இருந்தார். அப்போது பொன்னர் சங்கரில் சினேகாவும் நடிப்பதாக கருணாநிதியிடம் தெரிவித்தாராம் பிரஷாந்த்.
பொன்னர் சங்கரில் நெப்போலியன், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், ஜெயராம், விஜயக்குமார் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கவுள்ளது.


Click it and Unblock the Notifications











