சாப்ட்வேர் நிறுவன அதிபரை மணக்கும் ஸ்ரீதேவி

விஜயகுமார்-மஞ்சுளா தம்பதிகளின் கடைசி மகள் நடிகை ஸ்ரீதேவி. இவருக்கு மூத்தவர்களான வனிதா, ப்ரீதா, ஆகியோருக்கு திருமணம் ஆகிவிட்டது.
ஸ்ரீதேவி, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இப்போது கதாநாயகியாகவும் நடித்துக் கொண்டுள்ளார்.
தெய்வக் குழந்தை, டேவிட் அங்கிள், ரிக்ஷா மாமா, அம்மா வந்தாச்சி ஆகிய படங்களில் குழந்தையாகவும், காதல் வைரஸ், பிரியமான தோழி, தேவதையை கண்டேன், தித்திக்குதே ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் நடித்து இருந்தார். இப்போது தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.
இந் நிலையில் இவருக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. மணமகன் பெயர், ராகுல். எம்.பி.ஏ. படித்தவர். ஹைதராபாத்தில் சொந்தமாக சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர்களின் நிச்சயதார்த்தம் வரும் 15ம் தேதி சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள விஜயகுமாரின் வீட்டில் நடக்கிறது. திருமணம், வருகிற ஜூன் மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications











