முற்றுகையில் சிக்கிய த்ரிஷா

அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன், தற்போது சர்வம் என்ற படத்தை இயக்கி வருகிறார். லண்டன் கருணாசின் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் இதனை தயாரித்து வருகிறது.
இப்படத்தில் ஆர்யா-த்ரிஷா முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. தற்போது பாடல் காட்சிகளுக்காக படக்குழுவினர் கோவா சென்றுள்ளனர். இப்படத்தின் மூலம் முதன் முறையாக த்ரிஷா நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் (அடடே).
கோவா கடற்கரையில் நேற்று நடைபெற்ற பாடல் காட்சி படப்பிடிப்பின்போது நடிகை த்ரிஷா நீச்சல் ஆடுவதுப் போன்ற காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
அப்போது அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் த்ரிஷாவை அடையாளம் கண்டுக் கொண்டு அவரது பெயரை சொல்லி அழைத்து சூழ்ந்துக் கொண்டனர். இதைப் பார்த்த இயக்குனர் விஷ்ணுவர்தன் உடனடியாக விரைந்து சென்று ரசிகர் பட்டாளத்திடம் இருந்து த்ரிஷாவை மீட்டார்.
இதைத் தொடர்ந்து படப்பிடிப்பை கோவாவின் மக்கள் நடமாட்டம் அற்ற கடற்கரை பகுதிக்கு அவர் மாற்றினார். தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











