வ குவார்ட்டர் கட்டிங் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார் லேகா வாஷிங்டன்.
டிவி காம்பியராக கலக்கிக் கொண்டிருந்த லேகாவுக்கு சினிமா உலகம் அந்த அளவுக்கு பிரகாசமான வரவேற்பைத் தரவில்லை.
ஆரம்பத்தில் சிம்புவுடன் நடிக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் அது கை கூடவில்லை. பின்னர் ஜெயம்கொண்டான் படத்தில் முக்கிய ரோலில் நடித்தார். ஆனாலும் பிரபலமாகவில்லை.
இதையடுத்து இந்திக்குத் தாவினார் லேகா. அங்கு பீட்டர் கயா காம் என்ற படத்தில் படு கவர்ச்சிகரமாக நடித்துக் கலக்கினார். அதன் பின்னர் தமிழில் அவரைக் காணவில்லை. இந்த நிலையில் வ குவார்ட்டர் கட்டிங் மூலம் மறுபடியும் தமிழில் தலை காட்டியுள்ளார்.
இப்படம் குறித்து பெரும் நம்பிக்கையில் உள்ளாராம் லேகா. இதுகுறித்து அவர் கூறுகையில், முதல் நாள் படப்பிடிப்பிலேயே தெரிந்து விட்டது இந்தப் படம் சூப்பர் ஹிட் என்பது. இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரியின் செயல்பாடுகள் அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது.
இப்படத்தில் நான் மரத்தைச் சுற்றி வந்து டான்ஸ் ஆடவில்லை. ஆனால் டான்ஸ் ஆடியிருக்கிறேன். உண்மையைச் சொன்னால் எனக்கு டான்ஸ் அவ்வளவாக வராது. ஆனாலும் இதில் நான் அழகாகவே டான்ஸ் ஆடியுள்ளேன்.
மிகவும் வேடிக்கையான, ஜாலியான கதை இது. இதை நிச்சயம் ரசிப்பார்கள் ரசிகர்கள் என்றார்.
அடுத்து பவர் என்ற இந்திப் படத்தை எதிர் பார்த்திருக்கிறார் லேகா. ராஜ் குமார் சந்தோஷி இயக்கியுள்ள படம் இது. இதில் அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார் என்பதுதான் விசேஷம். அமிதாப்பின் மகளாக நடித்துள்ளாராம் லேகா. அஜய் தேவ்கன் இதில் லேகாவுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் தனக்கு இந்தியில் பிரேக் தரும் என்கிறார் லேகா.
திரிஷா, ஆசின் கூட இப்படித்தான் 'பிரேக்' இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். லேகாவுக்காவது சரியான பிரேக் கிடைக்கிறதா என்று பார்ப்போம்!


Click it and Unblock the Notifications











