பாடணும், ரேவதி மாதிரி வரணும்..!

By Staff

Meera Nandan
வால்மீகி மூலம் தமிழில் ஹிட் ஆகியுள்ள மலையாளத்து மீரா நந்தன், ரேவதி மாதிரி நடிக்க ஆசைப்படுகிறேன், கவர்ச்சிக்கு ஸாரி என்று கும்பிடு போடுகிறார்.

அந்தக் காலத்து நடிகைககள் எல்லாம் சாவித்ரி மாதிரி நடிப்பேன், பத்மினி மாதிரி நடிப்பேன் என்பார்கள். ஆனால் இப்போது வருகிறவர்களோ அப்படியெல்லாம் பெரிய லட்சியம் எதையும் கொண்டிருப்பதில்லை.

ஒரு சிலர் மட்டுமே முன்னாள் நாயகிகளை உதாரணம் காட்டி லட்சியப் பாதையில் நடைபோடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவராக மீரா நந்தன் உள்ளார். ரேவதி மாதிரி நடித்துப் பெயரெடுக்க வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாம்.

ரேவதியைப் போலவே இவரும் மலையாளத்துக்காரர்தான். அங்கு இப்போதுதான் ஹிட் ஆகியுள்ள மீரா, வால்மீகி மூலம் தமிழிலும் பெயரெடுத்து விட்டார்.

தற்போது அய்யனார் என்ற படத்தில் நடிக்கிறார். தேனப்பன் தயாரிக்கும் இப்படத்தின் நாயகன் 'மிருகம்' ஆதி. இதேபோல காதலுக்கு மரணமில்லை என்ற படத்திலும் நடிக்கிறாராம் மீரா.

கிளாமர் பண்ண மாட்டேன். ரேவதி மாதிரி நடிப்பேன். நல்ல கேரக்டர்களை மட்டுமே செய்வேன். நல்ல குரல் வளம் உள்ளது. எனவே எப்படியாவது ஒரு படத்திலாவது பாடி விடுவேன் என்று அடுக்கிக் கொண்டே போகிறார் மீரா.

பெயரே மீரா என்பதால் பக்திப் பாடல்களையும் பாடியுள்ளாராம் - மலையாளத்தில் ஒரு ஆல்பம் மூலமாக.*

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X