மலையாளம் திரும்பும் விமலா

கே.பாலச்சந்தரின் பொய் படம் மூலம் நடிக்க வந்தவர் விமலா ராமன். ஆனால் பொய்க்குப் பிறகு விமலாவுக்கு தமிழ் திரைவானில் பிரகாசம் இல்லாமல் போனது. இதனால் மலையாளத்திற்குத் திரும்பினார்.
மோகன்லாலுடன் காலேஜ் குமாரன், மம்முட்டியுடன் நஸ்ரனி, திலீப்புடன் டைம், ஜெயராமுடன் சூரியன் என அடுத்தடுத்து மலையாளத்தில் நடித்தார். ஆனால் எதுவுமே அவருக்குக் கை கொடுக்கவில்லை.
இதனால் மீண்டும் தமிழ் பக்கம் கவனத்தைத் திருப்பினார். இந்த முறை லக் விமலாவைப் பார்த்து சற்றே சிரித்தது. சேரனுடன் ராமன் தேடிய சீதையில் நான்கு நாயகியர்களில் விமலாவும் ஒருவராக நடித்து வருகிறார்.
ஆனால் இதைத் தவிர வேறு படம் எதுவும் தமிழில் இல்லையாம். இதனால் மறுபடியும் மலையாளப் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளார்.
இதன் பலனாக நிதின் பார்த்தசாரதியின் அபூர்வா உள்ளிட்ட இரு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அபூர்வா படத்தில், நம்ம ஊரு செந்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
எதற்காக தமிழ், மலையாளம் மட்டும் பக்கம் சுற்றுகிறார் விமலா, தெலுங்குப் பக்கமும் தேட்டையைப் போடலாமே!


Click it and Unblock the Notifications











